தென்காசி ரயில் நிலையத்தில் அதிவேக ரயில் இயக்கத்திற்கான சோதனை நடைபெற்றது.

இதில் தென்காசியில் இருந்து நெல்லை ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த சோதனை விரைவு ரயில் தென்காசியில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு நெல்லை சந்திப்புக்கு 1.20 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயில் நான்கு பெட்டிகளை சுமந்து சென்றது. மேலும் இந்த பாதையில் தற்போது வரை 70 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், நெல்லை, திருநெல்வேலி, தொடர்வண்டி



Source link