திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை, மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
பின்பு தொழிலாளருக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக 94981 11191 , 9498181455 என்ற உதவி எண்ணிற்கு அல்லது வாட்ஸ்சப் எண் – 9626 273399 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தொழிலாளருக்கு துண்டு பிரசாரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன்பிறகு பேசிய திருச்சி மாநகர காவல் துறை ஆணையர், ‘திருச்சி மாநகரத்தில் 3,500 வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாரம் ஒருமுறை விழிப்புணர்வு வழங்கபட்டு வருகிறது. இதுவரை எந்த விதமான பிரச்சனைகளும் திருச்சியில் இல்லை.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
தவறான வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.