தஞ்சாவூர் மாதக்கோட்டைப் பகுதியில் உள்ள மிருகவதைத் தடுப்புச் சங்கத்தில், கால்நடைப் பாரம்பரியத் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நாய்கள் கண்காட்சியினை நடத்தியது. கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பி பாறை, கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட 200 நாய்கள் பங்கேற்றன.

தொடர்ந்து கண்காட்சியில் உரிமையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள், அணிவகுப்பு, தனி திறன் போட்டிகள் நடைபெற்றன. அதில் சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், இந்த கண்காட்சியில் அரிய வகை பறவைகள், பெரிய அளவிலான ஓணான், சிலந்தி, பாம்பு ஆகியவையும் இடம்பெற்றன. விழாவில், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச் செல்வன், மிருகவதை தடுப்பு சங்க அலுவல் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், ஆசிப் அலி, விஜயலெட்சுமி பாரதி, சதீஷ்குமார், ரெட் கிராஸ் துணைத் தலைவர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் ரெத்தினகுமார், டிக்சன், ராபீன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இதுகுறித்து பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர், ‘பாரம்பரிய நாய் இனங்களை பாதுகாக்கவும், செல்லப்பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தும் விதமாகவும் நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன… அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் செல்லப்பிராணிகளை பலரும் கொண்டு வந்தனர். பல்வேறு விதமான நாய்கள் இடம் பெற்றது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் கண்காட்சி என்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link