வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எழுமிச்சை பழ வரத்து குறைவால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் ஒன்று எலுமிச்சை. எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து விருப்பத்துக்கு ஏற்றார் போல சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து பருகுவது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இது கோடைகாலத்துக்கு மிகவும் உகந்ததாக விளங்குகிறது.
கோடைக்கு உகந்த எலுமிச்சை
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
எலுமிச்சை பழச்சாற்றில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த எலுமிச்சை பழ சாறை வெயில் காலத்தில் அதிகம் பருகுவதை மக்கள் விரும்புகின்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதனால் இப்போதே மக்கள் குளிர்பானங்கள், கூழ், நுங்கு, இளநீர் போன்ற கடைகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். எலுமிச்சை பழங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டதால், பழத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும் படிக்க : செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? நெல்லை மருத்துவர் கூறும் அறிவுரையை கேளுங்க..!
இருப்பினும், தஞ்சை காமராஜர் காய்கனி மார்க்கெட்டுக்கு தினமும் 5 டன் வீதம் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. பொதுவாக தஞ்சை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலும் இருந்து பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆந்திரா மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுவும் குறைந்த அளவிலேவிற்பனைக்கு வருகின்றன.

காமராஜர் காய்கனி மார்க்கெட்
விலை அதிகரிப்பு::-
இதனால் எலுமிச்சை பழங்களின் விலையும் அதிகரித்து விட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தஞ்சை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் செல்ல, செல்ல பழங்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கோடை வெயில் தொடக்கத்திலேயே பழங்கள் விலை அதிகரிக்க ஆரம்பித்ததால், ஏப்ரல், மே மாதங்களில் எலுமிச்சை பழங்களின் விலை இன்னும் அதிக அளவில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை:
இது குறித்து எலுமிச்சை பழ மொத்த வியாபாரி ராஜா, கோடை வெயில் அடிக்க தொடங்கி விட்டதால் எலுமிச்சை பழங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி விட்டது. மேலும் பழங்கள் வரத்தும் குறைவாகத்தான் உள்ளது. தஞ்சை மார்க்கெட்டுக்கு 5 டன் வந்த நிலையில் தற்போது 1 டன் தான் விற்பனைக்கு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் பழங்களின் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு அதிகபட்சமாக 150 ரூபாய் விலை தாண்டாது.. இந்த இரண்டு மாத விலை அதிகமாக தான் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: