கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கண்ணில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த மனைவி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த கந்தன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சமகாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கந்தன் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கந்தனின் மனைவி சந்தியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து அடிக்கடி வந்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(கிருஷ்ணகிரி)

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

ஒரு கட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரது செல்போனை ஆய்வு செய்தார். அதில் சக்தியும், சந்தியாவும் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இதனை கண்டு ஆத்திரமடைந்த கந்தன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், இதனை கண்டுகொள்ளாத சந்தியா சக்தியுடன் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று கந்தன் தான் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். வழக்கம் போல் கணவர் வேலைக்கு சென்று விட்டார் வீட்டிற்கு வா என சந்தியாவும் சக்தியை அழைத்துள்ளார். வீட்டில் உல்லாசமாக இருந்த நிலையில், இரவு 11 மணியளவில் இருவரும் கந்தன் வீடு திரும்பியுள்ளார். இருவரும் வீட்டில் இருப்பதை கண்ட கந்தனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. உடனே சந்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதும் சந்தியாவும், சக்தியும் ஒன்றாக சேர்ந்து கந்தன் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் சந்தியா இது குறித்து சக்தியின் நண்பரிடம் கணவர் வழுக்கி விழுந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் சந்தியா உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நண்பர் வசந்த், கந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்த் நண்பரின் மனைவியுடன் சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்ததாக அதிகாரி. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link