அடர்ந்த காட்டில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாறைகளை கடந்து 2 கிலோ மீட்டர் வனப்பகுதியில் நடந்தால் செண்பகாதேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாறைகளையும் படிகளையும் கடந்து இரண்டு கிலோமீட்டர் மலை ஏறி வந்தால் செண்பகாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருக்கிறது. இந்த செண்பகாதேவி அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் போன்ற பல நம்பிக்கையுடன் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அகத்திய முனிவர் பொதிகை மலைக்கு செல்லும் பொழுது திரிகூட மலை வந்தடைந்தார் அப்போது செண்பகாதேவி அம்மனிடம் திரி கூட மலைக்கு செல்லும் ரகசிய சூட்சமங்களை கேட்டறிந்ததாகவும் செவி வழி செய்திகள் கூறுகின்றன.
மேலும் செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் தான் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.மேலும் இங்கு சித்ரா பவுர்ணமி இந்த கோயிலில் கோலாகலமாக நடைபெறும். வனத்துறையினரிடம் ஆதார் அட்டை நகல் கொடுத்து வனத்துறையின் கண்காணிப்பில் தான் இந்த செண்பகாதேவி திருக்கோவிலுக்கு வர முடியும். மாசத்தில் வரும் ஒரே ஒரு செவ்வாய் கிழமை மட்டும் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைக்கப்படும். மேலும் பௌர்ணமி தோறும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குப் பின்னால் தான் செண்பகாதேவி அருவி அமைந்திருக்கின்றது இது குற்றால மெய்யின் அருவிக்கு மேலே அமைந்திருக்கும் அருவியாகும்.
உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)
ஆனால் இந்த அருவியில் இருந்து தான் பல பகுதிகளுக்கு குடிநீர் செல்வதால் இங்கு குளிப்பதற்கு அனுமதி கிடையாது.
மேலும் இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது அதற்கு மக்கள் மஞ்சள் தூவி பூஜைகள் செய்து வருகின்றனர். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர், அகத்தியர், உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவை இடம் பெற்றுள்ளன. பௌர்ணமி தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம், ஆனால் மதியம் வரை தான் கோவிலுக்கு மலை ஏறப்படுவார்கள்.
பொதுமக்கள் மலைக்கு மேலே பிளாஸ்டிக் பாட்டில்கள் கவர்ந்து பயன்படுத்தப்படுவதால் வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருப்பதால், வனத்துறையினரால் பரிசோதிக்கப்பட்ட பின் மேலே அனுமதிக்கப்படுவார்கள். .
பௌர்ணமி தோறும் இங்கு மதியம் அன்னதானம் செய்யப்படுகிறது. குத்து அரிசி என்று சொல்லக்கூடிய பாரம்பரிய அரிசியில் இருந்து பிரசாதம் செய்து அதை அன்னதானமாக வழங்குவதால் அதன் சுவை நாம் தினந்தோறும் சாப்பிடும் சாதத்தை விட ஒரு வித்தியாசமான சுவையை கொடுத்தது. மேலும் இந்த அன்னதானம் ஒரு மினி விருந்து போல் சாம்பார் மோர் கூட்டு சக்கரை பொங்கல் என இருந்தது. சாமிக்கு படைக்க கூடிய கொழுக்கட்டையை விளக்கு போல் செய்து அம்மனுக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.
இப்படி வழிபாடு செய்வதால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.நானும் அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு செண்பகாதேவி அம்மன் அருளை பெற்று வீடு திரும்பினேன். அடுத்த பௌர்ணமிக்கு அதிகாலையிலேயே செண்பகாதேவி அம்மனை தரிசிப்பதற்கு சிற்றருவியில் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று மலை ஏறி அம்மனை தரிசித்து விட்டு வாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.