விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற உள்ளூர் பயிர் ரகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புழக்கத்தில் இருந்து மறைந்து போன பழைய வேளாண் கருவிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பயன்பாட்டில் இருந்து மறைந்து போன அரிய வேளாண் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் அஞ்சரை பெட்டி, அரிக்கேன் விளக்கு, மரக்கா போன்ற பழைய பொருட்கள் அறிந்த கமலை , நீர் இறைக்கும் பெட்டி, கொட்டப்புடி போன்ற கேள்விகளே படாத உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இது பற்றி பேசிய மாவட்ட வேளாண்மை இணை-இயக்குநர் வளர்மதி இவையெல்லாம் பண்டைய காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய கருவிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெறப்பட்டு தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

கமலை:

கமலை என்பது மோட்டார் பம்ப் செட் வருகைக்கு முன்னர் நீர் இறைக்க பயன்பட்ட கருவி. இந்த கமலை என்னும் கருவியை கயிறு கட்டி கிணற்றில் போட்டு அதன் மறுமுனையை மாடுகளை வைத்து, கயிற்றை இழுத்து நீர் இறைப்பர். இப்போது மோட்டார் பம்ப் செட் வந்துவிட்டதால் இதன் தேவை இல்லாமல் போய்விட்டது என்றார்.

கொட்டப்புடி:

கொட்டப்புடி என்பது வயலில் விளைந்த பொருட்களில் இருந்து உமியை தட்டி பிரித்து எடுக்க பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி.

இது போன்று அம்மி, திருக்கை, உரல், பனையோலை பெட்டி போன்ற அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் சில பொருட்கள் நமக்கு பரிட்சயமானவை எனினும் அவற்றின் பயன்பாடு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link