தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் போலியான முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சிட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலி முத்திரைத்தாள் :-

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்தகம்பம்மெட்டு சாலை பதினெட்டாம் கால்வாய் அருகே, கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் இளையராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

அப்போது சந்தேகம் படும் படியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த காவல்துறை அதிகாரிகளுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளனர். காரில் வந்தவர்கள் கேரள மாநிலம் மொண்டிஎருமையில் பத்திரப்பதிவு அலுவலகம் வைத்திருப்பதாக கூறி, 5000 மதிப்புடைய முத்திரைத்தாள்களை காவல்துறை அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர்.

அதனை சோதனை செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் போலி முத்திரைத்தாள்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது .

போலீசாரின் விசாரணையில் காரில் வந்த இரு நபர்கள், இடுக்கி மாவட்டம் பாரத்தோடு கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய முகமது சியாது மற்றும் இடுக்கி மாவட்டம் சிரட்ட வேலில் பகுதியைச் சேர்ந்த 36 வயது பிபின் தாமஸ் என்பது தெரிய வந்தது.

இவர்கள் கம்பம் பகுதியில் உள்ள 15 ஆவது வார்டு ஓடக்கரை தெருவில் உள்ள கோபி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் போலி முத்திரைத்தாள்கள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விசாரணை நடத்தியதில் தெரிய வந்தது.

இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் முத்திரைத்தாள்கள் போலியாக அச்சடிக்க பயன்படுத்திய இடத்திற்கு சென்று அங்குள்ள பொருட்களை கையகப்படுத்தியுள்ளனர்.

அங்கே, ரூ. 5000 மதிப்புள்ள 4 முத்திரைத்தாள், 1000 மதிப்புள்ள 4 முத்திரைத்தாள், 100மதிப்பு உள்ள 3 முத்திரைத்தாள், பின்பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட வெட்டப்படாத 500 ரூபாய் தாள் அடங்கிய ஈ4 சீட் 1, முத்திரை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கேனன் பிரிண்டர், மகேந்திரா கார் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link