திருச்சியில், தி.மு.க., எம்.பி., சிவா வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்ற எம்.பி., ஆரதவாளர்களை, அங்கு சென்று அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்க முயன்றனர். அதை தடுக்க முயன்ற பெண் போலீஸ் ஒருவரும் காயமடைந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, எம்.பி., தரப்பில் சூர்யாகுமாரும், அமைச்சர் தரப்பில் 54வது வட்டச் செயலாளர் மூவேந்தரும் செஷன்ஸ் நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ காலணியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறக்க பந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
விழாவில் பங்கேற்பவர்கள் வரிசையில், தி.மு.க எம்.பி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. இது தவிர, திறப்பு விழா பெயர் பலகையிலும் எம்.பி.யின் பெயர் இடம் பெறவில்லை. இது தவிர, எம்.பி வீட்டின் வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர்.
அரசு திட்டத்தில், விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்.பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, திறப்பு விழா பெயர் பலகையில் அவரது பெயர் இல்லாததும் ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர். உடனே, அமைச்சர் காரை நிறுத்தி என்னவென்று கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டுக் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் நிற்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ரகளையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டிய எம்.பி ஆதரவாளர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது அமைச்சர் ஆதரவாளர்கள், எம்.பி ஆதரவாளர்களை தாக்க முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற பெண் போலீஸ் சாந்தி என்பவரும் காயமடைந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, எம்.பி. தரப்பில் சூர்யாகுமாரும், அமைச்சர் தரப்பில் 54வது வட்டச் செயலாளர் மூவேந்தரும் அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், இரண்டாம் நிலை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் புகுந்து ரகளை செய்து, பெண் போலீசாரை காயப்படுத்தியதாக திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேன் துரைராஜ், 54-வது வார்டு பகுதி செயலாளர் திருப்பதியில் பகுதி செயலாளர் திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் நான்கு நபர்களும் கன்டன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனை அடுத்து ஐந்து நபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், ராஜா மலை, விஜய் ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ் ஆகியோர் ஒரே நேரத்தில் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததால், திமுகவினர் ஏராளமான கண்டோன்மெண்ட் காவல் நிலையம் முன்பு குவிந்தனர் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: