தேனி மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட இலவச தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலவச பயிற்சி மையம் :-

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தோறும் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற பொதுமக்களை, தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள, தேனி தாலுகா ஆபிஸ் எதிர்ப்புறம் அமைந்துள்ள RSETI (RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE) -கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற பொதுமக்களை தொழில் முனைவோராக பல்வேறு விதமான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுயமாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளித்து, அவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆக்கமும், ஊக்கமும் அளித்தலும், தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கி, சிறந்த தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்தோடு இயங்கி வருகிறது இந்த RSETI.

தொழில் தொடங்கத்தேவையான வங்கிக் கடன் மற்றும் அரசாங்கச் சலுகைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பயிற்றுவித்தல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்குப் பாடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிகள் :-

இங்கு தையல் பயிற்சி, மிசின் எம்பிராய்டர, அழகு கலை பயிற்சி, செல்போன் சர்வீஸ் பயிற்சி அப்பளம் ஊறுகாய் மற்றும் மசாலா பவுடர் தயாரித்தல், தொழில் முனைவோர் பயிற்சி, சிசிடிவி கேமரா நிறுவுதல் மற்றும் பழுதுபார்த்தல் பயிற்சி, கணினி பயிற்சி, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, செயற்கை நகை ஆபரணங்கள் தயாரித்தல், சணல் பை தயாரித்தல் பெட்டி மற்றும் ஈசி பழுதுபார்த்தல் பயிற்சி, டோ பிரேமிங் லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங், பஞ்சு பொம்மை தயாரித்தல், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல, கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், துரித உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பயிற்சியும் பயிற்சியின் தன்மையை பொறுத்து பத்து நாட்கள் முதல் 30 நாட்கள் வரை இலவசமாக அளிக்கப்படுகிறது.

ஆர்செட்டியில் கிடைக்கும் வசதிகள் :

பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு இலவச உணவு மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் ஆகிய வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்வதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

ஆர்செட்டியில் பயிற்சி பெற வேண்டிய தகுதிகள்:

பயிற்சி பெற விரும்புபவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு படித்தவர்களாகவும், 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். கிராமப் பகுதியைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்செட்டி பயிற்சி பெற தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய விவசாயம் சார்ந்த பயிற்சிகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.

பயிற்சி பெரும் நபர்கள் தேர்ந்தெடுத்தல்:

பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விரும்பும் நபர்கள் கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சி நிலையத்தினை அணுகும்போது அவர்களுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்படும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து வங்கிகளின் மூலமாகவும் பல்வேறு வளர்ச்சி நிறுவனங்களின் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பயிற்சி விவரங்கள் மதுரை மற்றும் கொடைக்கானல் வானொலி மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும் அறிவிக்கப்படுகிறது. தேவையான பயிற்சிக்கு முன் விண்ணப்பம் அனுப்பி பதிவு செய்தால், அப்பயிற்சி நடைபெறும் போது தகவல் தெரிவிக்கப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்

தரமான பயிற்சி :-

RSETI (RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE) -ல் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டாலும், பயிற்சியாளர்கள் மூலம் தரமான முறையில் இருப்பதாக, இங்கு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர்கள் கூறுகின்றனர்.

அணைத்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில் பயிற்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது, தேர்வில் வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டப்படுகிறது

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link