தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருக்கும் இட்டாலியன் ரெஸ்டாரன்டின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு ரூபாய் ஆஃபர் போடப்பட்டது. இதில் ஒரு ரூபாய்க்கு டீ, ஜூஸ், மினி பப்ஸ், கேக், மசாலா பப்ஸ், சால்ட் பப்ஸ், மேலும் அந்த கடையின் ஸ்பெஷல் ஹார்லிக்ஸ் பிஸ்கட், பூஸ்ட் பிஸ்கட் அனைத்தும் வெறும் 1 ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கடையில் குவிந்தனர். மேலும் 4 ஷவர்மா வாங்கினால் 2 சவர்மா இலவசம், 2 ஷவர்மா வாங்கினால் ஒரு ஷவர்மா இலவசம் போன்ற அதிரடி ஆஃபர்களும் வழங்கப்பட்டன. இதனால் அந்த கடையில் தென்காசி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்து உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உணவு, உள்ளூர் செய்திகள், தென்காசிSource link