இந்திய பெருங்கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட டால்ஃபின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடிய குமரி மற்றும் வடமாநில மீனவர்கள் 10 பேரை இந்திய கடற்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான டயனாஸ் 2 என்ற விசைப்படகில் பத்து மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது படகிற்குள் இந்திய அரசால் வேட்டையாட தடை விதிக்கப்பட்டிருந்த அரியவகை டால்ஃபின் மற்றும் சுறா மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
இதனைக் கண்ட கடற்படை அதிகாரிகள் படகில் இருந்த படகின் உரிமையாளர் ஆண்டனி உட்பட குமரி மற்றும் வடமாநில தந்தையைச் சேர்ந்த பத்து மீனவர்களையும் கைது செய்து குஜராத் மாநிலத்தில் உள்ள வேறொரு துறைமுகத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மீனவர்கள் அரியவகை மீன்களுடன் கைதாகி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: