தென்காசியில் கனகாம்பரம் விவசாயத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். கனகாம்பரம் நடவு செய்வது, பராமரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து தெளிவான தகவல்களை தருகிறார் தென்காசி விவசாயி.

பல வண்ணங்கள்:

தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் குறுந்தாவர வகைத்தான் கனகாம்பரம். இந்த மலர்கள் சிவப்பு, ஆரஞ்சு, டெல்லி ஆரஞ்சு, டெல்லி கனகாம்பரம் மற்றும் பச்சை கனகாம்பரம் ஆகிய வகைகளில் பல வண்ணங்களில் பூக்கும். இதில் பச்சை கனகாம்பரம் அழகுக்காக மட்டும் வளர்க்கப்படும் ஒரு தாவரம்.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

மழைக்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் பூக்களை கொடுக்கும் இந்த செடி, விவசாயிகளின் தோழனாக திகழ்கிறது. ஏக்கர் கணக்கில் பிற மலர்களை நட்டாலும் குறைந்தது செண்ட் கணக்கிலாவது கனகாம்பரம் செடியை நடுவதை விவசாயிகள் பழக்கமாக கொண்டுள்ளனர்.

கனகாம்பரம் செடி வளர்ப்பு

விவசாயிகளின் கணக்கு:

மற்ற மலர்களில் சாகுபடி இல்லாத நேரத்தில் கூட, இந்த செடியில் மலர்களை சாகுபடி செய்து அதன் மூலம் வீட்டு செலவுகளையாவது சரி கட்டலாம் என்பது விவசாயிகளின் கணக்காகும். கனகாம்பரம் வளர்ப்பதற்கு ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை ஏற்றதாக இருக்கும். நல்ல வடிகால் வசதி உள்ள மண் மற்றும் செம்மண் கனகாம்பரம் வளர்ப்புக்கு ஏற்றது. கனகாம்பரம் செடி வளர்ப்பதற்கு நிலத்தை நன்கு உழுது தேவையான அளவு பாத்தி அமைத்து, 1 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைகளை ஊன்றுதல் அவசியம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நட்ட 3ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அதன் பிறகு, 8 நாளைக்கு ஒரு முறை உப்பு வைத்து தண்ணி பாய்ச்ச வேண்டும். சில நேரங்களில் ஒரு கிலோ கனகாம்பரப்பூ 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பல நேரங்களில் குறைவான விலையில் விற்பனையானாலும் கைச்செலவுக்காவது உதவுகிறது விவசாயிகள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link