தேனி மாவட்டம் கூடலூரில் மாநில நெடுஞ்சாலை துறையினரால் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கூடலூர் பகுதியில் மரங்கள் அகற்றப்பட்டு, சாலை ஓரத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூடலூர் அரசமரம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு சாலை ஓரங்களில் இருந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக அரசமரம் பகுதியில் இருந்த அரச மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே, மாலை வேளையில் அரச மரத்தை வெட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தாமதமானது.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

இதனைத்தொடர்ந்து, இரவு வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டு, மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

தொடர் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் வீட்டில் படிப்பதற்கு மின்விநியோகம் இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறி, குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் விரைவில் மின்விநியோகம் சீராகும் என விளக்கமளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர், மின்வாரிய அதிகாரியிடம் பேசி துரிதமாக பணிகளை முடித்து, மின்வினியோகம் தரப்படும் என வாக்குறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகள் பணியை துரிதப்படுத்திய பின்னரே அப்பகுதியில் மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link