தஞ்சை மாவட்டத்தில் கோடை நடவு தொடங்கி விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து வழக்கத்திற்கு முன்னதாக, மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சம்பா, தாளடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவு நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது கோடை நடவு பணிகள் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

நடவு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்
இதையும் படிங்க : மதுரையின் முக்கிய பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லணையில் நீர் சனம் பாசனம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது போர் தண்ணீரில் கோடை நடவிற்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது. வழக்கம் தஞ்சை கோடை மாவட்டத்தில் நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். அதன்படி தற்போது பம்புசெட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு வட்டார பகுதியில் உழவுப்பணி, பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது. ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்படுகிறது. இதேபோல் கும்பகோணத்திலும் பம்பு செட் வைத்திருப்பவர்கள் கோடை நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: