நாமக்கல் புத்தக திருவிழாவில் வண்ண மீன்களின் கண்கவரும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், நாமக்கல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், அலங்கார மீன்கள் என்பவை அழகிய நோக்கங்களுக்காக வீடுகள், அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில் கண்ணாடி, தொட்டிகளில், கலன்களில் வளர்க்கப்படும் பல்வேறு வண்ணங்களைக்கொண்ட சிறிய ரக அழகுமீன்கள் ஆகும். தமிழ்நாடு, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வீடுகளில் அலங்கார வண்ண மீன்களை தொட்டியில் வளர்ப்பது ஒரு பொழுது போக்காகவும், சில சோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த அலங்கார மீன்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

கண்காட்சியில் அலங்கார வண்ண மீன்களை எவ்வாறு வளர்ப்பது மற்றும் மீன் தொட்டிகளை எவ்வாறு சுத்தம் செய்வது வண்ண மீன்களை காண வந்தவர்களுக்கு விழிப்புணர்வு கூறும் வகையில் அருங்காட்சியக அமைப்பினர் எடுத்துரைத்தனர். அருங்காட்சியத்தின் சிறப்பாக வண்ண மீன்களை காண வந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களுக்கு பிடித்த கலர் வண்ண மீன்களை தங்கள் வீடுகளில் வளர்ப்பதற்கு ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link