உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சரான பிறகு அரசியலில் தீவிரமாக இறங்கியதால், சினிமாவில் இனி நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். அவர் நடித்து வெளிவராமல் இருந்த படங்கள் அனைத்தும் தற்போது ரிலீஸ் ஆகி வருகின்றன.

அந்த வகையில் மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகிறார். அன்று இரவே பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு அவரின் காரை எடுத்து வருகிறார்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

மேலும் மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் சேர்க்க நினைக்கிறார். ஆனால் அந்த காரில் மரணமடைந்த நிலையில் அவர் உடல் கிடக்கிறது. இதற்கு பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? அதற்கு பின் இருக்கும் பெரும் சதி திட்டம் என்ன? என்பதே கண்ணை நம்பாதே படம்.

தஞ்சையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் டுவிஸ்ட் கலந்த இன்ட்ரஸ்டிங்கான கதையாக உள்ளது. குடும்பத்தினருடன் வந்து பார்த்ததில் மகிழ்ச்சி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்துள்ளனர்.

இவர்களுள் தஞ்சையைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளும் பாசிட்டிவான கமெண்டை மகிழ்ச்சியாகக் கூறினர். அவர்களுள் ஒருவர், ‘மனசார சொல்றேன், உதயநிதி படம் நல்லா இருக்கு’ என்று புகழ்ந்து பேசினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link