தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண்கள்விளக்கு பூஜை நடந்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதியாபுரம் ஏழாம் தெருவில் வினை தீர்க்கும் விநாயகரின் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். வினை தீர்க்கும் விநாயகரிடம் தீபாராதனை செய்த தீபத்தை கொண்டு விளக்கு ஏற்றி பூஜை தொடங்கியது.

சாரல் மழையிலும் நடைபெற்ற விளக்கு பூஜை

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு இந்த விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பக்தியுடன் பூஜைகள் செய்தனர்.

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், தென்காசிSource link