தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் தனி சிறப்பு பெற்றது. முட்டை உற்பத்தியில் இது இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‘விழுக்கா’ட்டை பூ’தி செய்கிறது. இங்கு, பண்ணைகளில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும் 3.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், தமிழ்நாடு, கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்தது போக, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும் இங்கிருந்துதான் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல்லில் முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்து வருகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய குழு தினசரி முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது.
இந்நிலையில், 2023 -24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை மறுநாள் (20ம் தேதி) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர், முட்டைகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோரிக்கைகள் என்னென்ன?
1) முட்டைகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
2) தேவையற்ற தானியங்களை கோழிக்கு உணவாக அளிக்க உதவ வேண்டும்.
3) கோழி பண்ணைகளுக்கான மின்சாரத்தை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.
4) முட்டைகளின் தரத்தின் அடைப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: