தேனி மாவட்டத்தில் இன்று(18.3.23) பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
ஹெலிகாப்டர் விபத்து:
அருணாசல பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரான பெரியகுளம் ஜெயமங்கலத்துக்கு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் தகனம் செய்யப்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 35 வயதுடைய மேஜர் ஜெயந்த் மற்றும் லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர். விமான விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் உயிர் இழந்தது மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து, அவரது உடல் ஜெயந்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஜெயமங்கலத்திற்கு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து, அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று முழு ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க சொந்த ஊரான பெரியகுளத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
கம்பம் நகராட்சி நகரமன்ற கூட்டம் :
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் பணிக்கு பயன்படுத்துவதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக கம்பம் நகராட்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கம்பம் நகராட்சி நகரமன்ற கூட்டம் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் துாய்மை பணியாளர்களை வேறு பணிக்கு பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
60 சதவீதம் துாய்மை பணியாளர்கள் மட்டும் துாய்மை பணிக்கு செல்வதாகவும், 40 சதவீதம் பேர் டிரைவர்களாகவும், அலுவலக உதவியாளர்களாகவும் இதர பணிக்கு பயன்படுத்துவதால், துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் புகார் கூறினர். விரைவில் இந்த பிரச்சனை சீர் செய்யப்படும் என நகர மன்ற தலைவர் கூறியுள்ளார்.
காட்டுத்தீ :
தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டு தீ பரவ தொடங்கியுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்கு தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வன காவலர்கள் பணியில் இருப்பதாகவும், தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மலை அடிவாரப் பகுதிகளிலும் வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பரவக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு தேனி மாவட்டம் மேகமலை கோட்டம் வனத்துறை இணை இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் :
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மார்ச் 20ஆம் தேதி 2023- 24 ஆம் தேதி நிதியாண்டுகளுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சிறு வியாபாரிகளின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டாக இது அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தேனி மாவட்ட வியாபாரிகள் எதிர்பார்ப்பதாக சின்னமனூர் வர்த்தக சங்கத் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023 -24ஆம் தேதி நிதியாடுக்கான பட்ஜெட்டை மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு பதிலாக தன்னிறைவு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சிறு வியாபாரிகளுக்கு பல்வேறு திட்டங்களை ஒதுக்க வேண்டும் எனவும், சிறுகுறிப்பு வியாபாரிகளின் நலன் சார்ந்த பட்ஜெட் ஆக வேண்டும் என தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதி வர்த்தக சங்கத்தினர் கூறுகின்றனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் :
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தக்காளி மற்றும் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் அவற்றிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியில் மலை மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் எனவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எடுக்க வேண்டும் எனவும்,
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி மண்டப பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: