தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை மறுநாள் (மார்ச் 20ஆம் தேதி) 2023- 24ஆம் தேதி நிதியாண்டுகளுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சிறு வியாபாரிகளின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டாக இது அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேனி மாவட்ட வியாபாரிகள் எதிர்பார்ப்பதாக சின்னமனூர் வர்த்தக சங்க தலைவர் உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023 -24 ஆம் ஆண்டு நிதியாடுக்கான பட்ஜெட்டை மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த வகையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வர்த்தகர்களுக்கான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு பதிலாக தன்னிறைவு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதி வர்த்தக சங்கத்தினர் கூறுகின்றனர் .
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
2023-24ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட் குறித்து வர்த்தகர்களின் எதிர்பார்ப்புகளாக, வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர் , “ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2ம் இடத்திலும் உள்ளது. 3ம் இடத்தில் குஜராத் உள்ளது. பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களைப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
2020-22 கணக்கின்படி தொழில் துறை உற்பத்தி மதிப்பு ரூ.29.3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் துறை முன்னேற்றத்துக்காக கடந்த நிதிநிலை அறிக்கை ரூ.3,276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னேறி உள்ளதால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் மதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் பட்ஜெட் வர்த்தகர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் காப்பீடு தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வர்த்தகர்களின் பங்கு முக்கியமாக இருப்பதால், வர்த்தகரின் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
GST வரி விதிப்பு தொடர்பாக முழு புரிதல் வர்த்தகர்கள் இடையே உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் இதர வரிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வணிகர்களுக்கு தனிக்குழு அமைக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியுடன் GST குறித்த முழு தகவல் மற்றும் வரி விதிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய மென்பொருள் உருவாக்க அரசு முன் வர வேண்டும். ஜிஎஸ்டி சட்டங்களை எளிய முறையில் கொண்டுவர வேண்டும்.
தொடர் விலைவாசி உயர்வால் தங்கம் விற்பனை தொழில் முடங்கி உள்ளது . மெட்ரோ சிட்டியில் மட்டும் தொழில் நடத்தி வந்த பெரிய நிறுவனங்கள் தற்போது 2ம் கட்ட நகரங்களிலும் தங்களது கிளைகளை விரிவுபடுத்தி உள்ளன. இதனால் உள்ளூர் அளவில் சிறு நகை விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கார்ப்பரேட் நிறுவனத்துடன் சிறு வியாபாரி போட்டி போட்டு அவர்களுக்கு நிகரான வரி கட்டுவது சாத்தியமில்லாதது. எனவே, முழுமையாக வர்த்தகர்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டை அரசு அறிவிக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதேபோல, சிறு வியாபாரிகளுக்கான பல திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்” என்று தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வர்த்தக சங்கத் தலைவர் உதயகுமார் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: