புதுக்கோட்டை மாவட்டத்தில் வானவில் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றன.

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது இலக்கிய மன்றப் போட்டிகள், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படப் போட்டிகள் என பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி அதில் சிறந்த முறையில் வெற்றியடையும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கிறது தமிழக பள்ளி கல்வித்துறை.

அதில் ஒரு பகுதியாக வானவில் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடைபெற்றது. அதில் தேர்வு பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்பர். அந்த வகையில் புதுக்கோட்டைமாவட்ட அளவிலான போட்டிகள் நிஜாம் ஓரியண்டல் அரபி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் நீர்மூழ்கிக் கப்பல், ஏர் கூலர், நிலநடுக்கம் உணர்வி, தூசு உறிஞ்சி அன்றாட வாழ்வில் காற்றழுத்தம் என பல்வேறு வகையான படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்

இந்த வானவில் மன்ற போட்டியில் கலந்துகொண்ட மாணவன் யோகபிரகாஷ் பேசியபோது, ​​’இதுபோன்ற போட்டிகள் மாணவர்களாக நடத்துவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் எங்களை ஊக்கப்படுத்தி எங்கள் தனி திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றனர்.

மேலும் கல்வித்துறையின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வது என்பது நாங்கள் அங்கிருக்கும் வாழ்வியல் முறைகளையும், அந்த நாட்டைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது” என்று கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link