கடந்த சில மாதங்களாகவே கே.எல்.ராகுலின் ஆட்டத்திறன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அந்த விமர்சனங்களையெல்லாம் நேற்று உடைத்தெறிந்திருக்கிறார் கே எல் ராகுல். அதேபோல காயம் காரணமாக 8 மாதத்திற்கு பிறகு தனது 300வது போட்டியில் களம் இறங்கி 45* ரன்கள் குவித்து 2 விக்கெட் வீழ்த்தி சர்வதேச ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் ஜடேஜா. கே.எல்.ராகுல் – ஜடேஜா இணைதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய சொன்னது. டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து மிட்செல் மார்ஷ் ஓபனிங் செய்தார். ஐசிசி நம்பர் ஒன் பௌலர் முகமது சிராஜிடம் முதல் ஓவரிலேயே 5 ரன்களில் ஹெட் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க, மீண்டும் விக்கெட் விடாமல் பவர் பிளேவை சரியாக பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி ரன்களை குவித்தார் மிட்செல் மார்ஷ். ஸ்மித்தும் தன் பங்குக்கு பவர் பிளேயில் பவுண்டரிகளை அடித்திருந்தார். பவர்ப்ளே முடிவில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் 59 ரன்கள் எடுத்தனர் மிட்செல் மார்ஷ் – ஸ்மித் கூட்டணி.Source link