டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது.தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை சுப்மன் கில் ஆப் சைடில் தொட்டுக் கொடுக்க, அதனை லபுசானே பாய்ந்து பிடித்தார். கில் டக் அவுட். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். கோலியும்,ரோஹித்தும் அடித்த சில பவுண்ட்ரிகள் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையைக் கொடுத்தாலும், சில மணித்துளிகளில் விழுந்த ரோஹித்தின் விக்கெட்டால் அந்த நம்பிக்கையும் சரிந்தது.

5வது ஓவரில் ஸ்டார்க் விசிய பந்தில் ரோஹித் சர்மா அவுட் சைட் எட்ஜ் கொடுத்து அவுட்டானார்.

அதன் பின்பு, சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்திலே lbw ஆகி நடையைக் கட்டினார். சூர்யகுமார் யாதவ் இதுவரை 22 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 433 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

டி20 இல் பொளந்து கட்டும் சூர்யகுமார் யாதவிற்கு ஓடிஐ போட்டிகளில் சொதப்பல்கள் தொடர்ந்தன.

சுப்மன் கில்லும், சூர்யகுமார் யாதவும் முதல் ஓடிஐ-யில் அவுட் ஆனதை போலவே அசால்ட்டாக இந்த போட்டியிலும் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த போட்டியில் கலக்கலாக ஆடி கம்பேக் கொடுத்த கே.எல்.ராகுல் இந்த போட்டியில் 9 ரன்களில் ஸ்டார்க் பௌலிங்கில் lbw ஆகி அவுட்டானார்.

அடுத்து ஹர்திக் பாண்டியா களம் கண்டார். சீன் அபாட் வீசிய பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு எட்ஜ் வாங்க அதை ஸ்டீவ் ஸ்மித் பாய்ந்து அசத்தலாக பிடித்தார்.

சண்டே அதுவாக இந்த போட்டி செம்ம ட்ரீடாக அமையும் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள் பேரதிர்ச்சியைத் தந்தது. மேலும், ஒரு பாட்னர்சிப்பது வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இந்திய அணி பவர்பிளே முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.நீண்ட நேரத்திற்குப் பிறகு 11 ஓவரில் விராட்கோலியின் பேட்டியில் இருந்து பவுண்ட்ரி வந்தது.ஒரு யுகம் கழித்து பவுண்ட்ரி வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

நிதானமாக ஆடிய விராட்கோலியும் எல்லிஸ் பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி நிலை தடுமாறிப் போனது.



Source link