புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட மாவட்டங்களில் ஒன்று. இங்கு மானாவாரியான விவசாயமே நடைபெற்று வருகிறது. சுமார் 95731 ஹெக்டர் நிலப்பரப்பில் இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பட்ஜெட்டில் கூடுதல் நிதி:

புதுக்கோட்டையில் 6000 சிறிய, பெரிய குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் மழை பெய்தால் மட்டுமே நிரம்பக் கூடியவை. எனவே காவிரியில் இருந்து காவிரி வைகை குண்டாறு இணைப்பு என்ற திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

அதற்கு அடுத்தபடியாக தற்போதைய சூழ்நிலையில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதே மிகவும் குறைவாகிவிட்டது. இதனால் நடவு பணிகள் தொடங்கி அறுவடை பணிகளும் கூட காலதாமதமாக நடக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயப் பணிகளுக்கு இயந்திரமயமாதல் என்பது தற்போது தேவைக்குரிய ஒன்றாக உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டாலும் அதன் எண்ணிக்கை குறைவாக உள்ளது அதை அதிகப்படுத்தி, விரும்பும் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் பெற்றுக் கொள்ளுமாறு வழிவகை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

நேரடியாக கொள்முதல்:

இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டமானது தற்போது இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதில் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த பாரம்பரிய இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல் ரகங்களை அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்து அதன் நியாய விலைக் கடைகளின் வழியாகவும், மேலும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தின் மூலமாகவும், பின்னர் மருத்துவமனைகளில் அரசாங்கத்தின் மூலமாகவும் இந்த பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு அங்கீகாரமும் மேலும் அவர்களுக்கு உரிய விலையும் கிடைக்கும்.

போதுமான அளவு இடமில்லை :

மேலும் புதுக்கோட்டையில் 6000க்கும் மேற்பட்ட குளங்கள், கம்மாய்கள் உள்ளன. அவற்றை முறையாக தூர்வாரி பராமரிப்பு செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளால் நெல்லை சேமித்து வைத்துக்கொள்ள புதுக்கோட்டை மாநில மாவட்டத்தில் 2 நெல் சேமிக்கும் கிடங்குகள் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அங்கு வைத்து தற்போது கொள்முதல் செய்யும் நெல்லை வைப்பதற்கான போதுமான அளவு இடமில்லை எனவே நெல்லை வைப்பதற்கான கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் :

மேலும் மானிய விலையில் வழங்கப்படும் விதைகள் அந்த விதைக்கின்ற பருவ காலங்களில் விரைவாக வழங்கப்பட வேண்டிய பருவம் தவறிய பின் மானிய விலையில் விதைகள் வழங்கப்படுவதால் அதை பயிர் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தரிசு நிலங்களை விவசாய நிலம் ஆகும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அது கூடிய விரைவில் அதிக அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பன விவசாயிகளின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link