தமிழ்நாடு சட்டபேரவையில் நாளை 2023-24 நிதியாண்டுகளுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்றவாறு பட்ஜெட் தாக்கல் அமைய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.

பட்ஜெட் தாக்கல்:

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023 -24 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை (மார்ச் 20 ஆம் தேதி) சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கரும்பு நான் தோட்டக்கலை பயிர்கள் மற்றும் நெல்போன்ற பயிர்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு பட்ஜெட் எதிர்பார்ப்பு :

இந்திய விவசாய சங்க கூட்டமைப்பு மாநில துணை செயலாளரான, கலிவரதன் கரும்பு கொள்முதல் செய்வது பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். முதலில் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நடவு முதல் அறுவடை வரை அனைத்துமே இயந்திரமயமாக்குதல் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

ஆலையின் பிழை திறனுக்கு ஏற்றார் போல ஒரு கரும்பு ஆலைக்கு குறைந்தபட்சம் 10 இயந்திரங்கள் கொடுக்க வேண்டும்.

அதுபோல அரசாங்கம் விவசாயி நிர்ணயத்தை ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் இன்னும் சென்றடையவில்லை. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சில விவசாயிகளுக்கு மட்டுமே சிறப்பு ஊக்கத்தொகை சென்றடைகிறது.

அதனை மாற்றி அனைத்து விவசாயிகளுக்கும் அந்த சிறப்பு ஊக்கு தொகை சென்று அடைய வேண்டும் எனவும், கரும்பு விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்கினால் செலவு மிச்சமாகும். எனவே கரும்பு விவசாயம் செய்ய எங்களின் திட்டங்களை செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் என கரும்பு கொள்முதல் செய்வது பற்றிய கருத்துக்களை தெரிவித்தார் .

நெற்பயிர் பட்ஜெட் எதிர்பார்ப்பு :

விழுப்புரம் அடுத்த சோழகபூண்டி பகுதியை சேர்ந்த விவசாயி பாஸ்கரன், விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டையை கொள்முதல் செய்வதற்கான கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் இல்லை. எனவே நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். அதே சமயம் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகாமல் இருக்க பாதுகாப்பான கொள்முதல் நிலையங்கள் தேவை. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் பாரம்பரிய நெல்களை சாகுபடி செய்கின்றனர்.

எனவே பாரம்பரிய இயற்கை வேளாண் சந்தைகளை நகரங்கள் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். நெல் முட்டைகளில் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் சரியான அரசாங்கத்திற்கு விழுப்புரம் விவசாயி கோரிக்கை வைத்தார்.

தோட்டக்கலை பயிர்கள் பற்றிய பட்ஜெட் எதிர்பார்ப்பு :

விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சிவா தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் நெற்பயிர்களுக்கு பிறகு விவசாயிகள் தோட்டக்கடை பயிர்களான கத்தரி வெண்டை பச்சை மிளகாய் போன்ற பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் தோட்டக்கலை பயிர்களை அறுவடை செய்தால் அதனை விற்பதற்கான போதிய இயற்கை வேளாண் சந்தைகள் இல்லை. எனவே இயற்கை வேளாண் சந்தை அதிகரிக்க வேண்டும். அறுவடை செய்யப்படும் காய்கறிகளை குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link