தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜீவனா தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கம்பம் கூடலூர் உத்தமபாளையம் கோம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
குறிப்பாக தக்காளி மற்றும் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் அவற்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வனப்பகுதியில் மலை மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் எனவும், உத்தமபாளையம் தாலுகாவில் தூர்வாரப்படாமல் உள்ள கால்வாய்களை தூர்வாரநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி மண்டப பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜீவனா, வட்டாட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: