நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் பயணிகளை கவரும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில், ஊட்டி மலை ரயிலை கண்டு வியக்காத சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள். இந்த மலை ரயிலில் பயணம் செய்வது தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவமாகவே கருதப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்லக்கூடிய மலை ரயிலை, ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் பதிவு செய்ய முடியும். அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு MTP To UAM அதாவது உதகமண்டலம் எனவும் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது, மலைகளின் நடுவே 4:45 மணி நேரம் பயணித்து, கண்களுக்கு பசுமை நிறைந்த இயற்கையை விருந்தளித்து, உதகை வந்து சேருகிறது. இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்வதற்கு முதல் வகுப்பிற்கான கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நடப்பு விலை பட்டியலாக மேட்டுப்பாளையம் வரை செல்வதற்கு 295 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஊட்டி மலை ரயில்

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரயிலும், உதகையிலிருந்து குன்னூர் வரை செல்வதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன. உதகைக்கு ரயிலில் வர விரும்பும் பயணிகள் இவற்றை தெரிந்து கொண்டு பாரம்பரியமிக்க மலை ரயிலில். ரம்யமாக பயணித்து, எப்போதும் அசைபோடும் பசுமையான நினைவுகளை சேமித்து என்ஜாய் பண்ணுங்க.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link