தேனி மாவட்டத்தில் இன்று (மார்ச் 20) நடந்த சில முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு

வர்த்தக சங்கம் :

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போடிநாயக்கனூரில் உள்ள வர்த்தக சங்கத்தின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

போடிநாயக்கனூர் வர்த்தக சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2021-22ஆம் ஆண்டு பயின்ற மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்வி உதவித் தொகை தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமாக அமையும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கூறினார்

சட்ட விரோதமாக மது விற்பனை :

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கம்பம் – ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள நகராட்சி தகனமேடை அருகே கம்பம் டிடிவி தினகரன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(53). இவர் அரசின் அனுமதி இன்றி மதுபானங்களை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளார். இதனைப் பற்றிய தகவல் தெரிந்த உடன் கம்பம் தெற்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

போலீசாரின் விசாரணையில் அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக சுமார் 26 மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மதுபாட்டில்களை விற்பனை செய்த வெங்கடேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கம்பம் பகுதியில் கம்பம் யூனியன் ஆபீசுக்கு பின்புறம் உள்ள புளியந்தோப்பில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரையும் போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பில் வைத்து சுமார் 28 மதுபாட்டில்களை லாப நோக்கத்திற்காக சட்ட விரோதமாக விற்பனை செய்த மதுரை மாவட்டம் முத்துப்பாண்டி பட்டியை சேர்ந்த 46 வயது குணசேகரன் என்பவரிடம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபரையும் கம்பம் தெற்கு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமை காவலர் கைது செய்தனர்.

விருந்து :

தேனி மாவட்டம் போடி அருகே கோடாங்கிபட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட திமுகவினர் சார்பில் நடைபெற்ற விருந்து விழாவினை தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கோடாங்கிபட்டியில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விருந்து நடைபெற்றது.

இந்த அரசு விருந்தினை தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ்ச்செல்வன் பங்கேற்று தொடங்கி வைத்தார். தேனி இந்த விருந்து நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விருந்து தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்றம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக முதல்வருக்கு சமர்பிக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி :

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதி மக்கள் இயக்கம் சார்பில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இன்றைய இளைஞர்கள் செல்போன், மது போதை போன்ற போதை பழக்கங்களில் மூழ்கியுள்ள நிலையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி மக்கள் இயக்கத்தின் சார்பில் போதை மருந்து வேண்டாம், விளையாட்டுக்கு ஆம் என்று சொல்லுங்கள் என்ற வாசகத்தினை மையமாகக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது.

இதையும் படிங்க : மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாத்தைச் சேர்ந்த 24 அணியினர் கலந்து கொண்டனர். போட்டிக்கு பரிசுத்தொகையாக 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு கோப்பையும் வழங்கப்பட்டது .

போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கும் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் சிறப்பு அணியினருக்கும் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையை கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி செயலர் அசோக்குமார், மியூசிக் ஸ்டார் செந்தில்நாதன் வழங்கினர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட விஜய் சேதுபதி மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக சென்று தேனி மாவட்டம் அலுவலகம் முன்பு சிலிண்டர் மத்திய விலை உயர்வு ,மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை உயர்த்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொது செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் எம்பி.எஸ்.முருகன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக சிலிண்டருடன் பேரணியாக சென்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினருடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம் :

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம கோவில் பூசாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவிற்குப் பின் அவரது மனைவிக்கு அத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தேனி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மற்றும் பூ கட்டுவோர் பேரவை இணைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம் 2000 வழங்கப்படும் என அறிவித்த ஆளும் திமுக அரசு தற்போது அதை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link