ஊட்டியில் உள்ள பிரதான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் தேர் பவனி செல்லும் பொழுது வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிரதான கோவிலான மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர் திருவிழாவில் நாள்தோறும் ஒவ்வொரு விதமான தேர்பவனி நடைபெறுகிறது. இவ்வாறு தேர் பவனி நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் செல்வதற்கு சற்று சிரமமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் உதவி நகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரதான வீதிகளில் தேர் பவனி செல்லும் பொழுது வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

சுற்றுலா நகரமான உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்தப் பாதைகளைத் தவிர்த்து மற்ற பாதைகளை உபயோகிப்பது மூலம் வாகன நெரிசலில் இருந்து தப்பிக்கலாம். மேலும், சுற்றுலா பயணிகளும் தங்களது நேரத்தை மிச்சப்படுத்தலாம். அந்த வகையில், எந்தெந்த பாதைகளை நீங்கள் உபயோகப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம். ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா மற்றும் உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை இணைக்கும் பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது உதகை லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் மார்க்கெட் சாலைகள்.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

உதகை மார்க்கெட் பகுதிக்கு அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தேர் பவனி நடைபெறும்பொழுது உதகை மார்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் இருந்து பேருந்து நிலையம், உதகை படகு இல்லம் வரை செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையாக உதகை ஏடிசி எட்டினன்ஸ் சாலை வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின்னர் படகு இல்லம் செல்லலாம். அல்லது உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து படகு அனைத்தும் செல்ல வேண்டிய வாகனங்கள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஹில் பங்க் சாலை மூலமாக பேருந்து நிலையம் சென்று படகு இல்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பாக, மார்க்கெட் பகுதிக்கு உள்ளூர் மக்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். மார்க்கெட் பகுதிக்கு நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரும் உள்ளூர்வாசிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தாமல் ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்துவதன் மூலம் வாகன நெரிசலை தடுக்கலாம். தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

உதகை நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் உதகை பேருந்து நிலையம் முதல் மார்க்கெட் பகுதி வரை வாகனங்கள் நிறுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்துவது நல்லது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த வழிமுறையை பின்பற்றி சிரமங்களை தவிர்த்தது என்ஜாய் பண்ணலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link