கன்னியாகுமரிபாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது தெரியவந்துள்ளது. குடும்பத்தினரின் கட்டாயத்தால் பாதிரியாரானவர் வழக்கில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. இவர் குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். பேச்சிப்பாறை, தக்கலை அடுத்த பிலாங்கலை பகுதிகளில் பாதிரியாராக இருந்துள்ளார்.

இந்நிலையில் பாதிரியார் பெனாடிக் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்கள், அவரது ஆபாச வீடியோக்கள் போன்றவையும் வைரலாக பரவி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Read More : ‘எல்லாமே இருக்கு அம்மு..’ கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

இளம் பெண் ஒருவர், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், உடலில் மோசமாக தொட்டதாகவும், வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பாதிரியார் அந்தரங்க உறுப்புகளை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் நாகர்கோவில் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனாடிக் ஆன்றோ மீது பாலியல் உணர்வைத் தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைதளங்களில் ஆபாச போட்டோக்கள் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை திங்கள் கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ 12-ம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் படித்துள்ளார். சென்னையில் பயிற்சி காலத்தின் போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.அந்த பெண்ணை பாதிரியார் காதலித்து, இருவரும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர்.கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேவை ஆற்ற வேண்டும் என்பது மரபு.

ஒருகட்டத்தில் தான் படித்த இறையியல் தத்துவத்துக்கு எதிராக நடந்து கொள்வது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு நெருடலை ஏற்படுத்தியதாம். இதனால் பாதிரியார் பொறுப்பில் இருந்து வெளியேறி காதலியை கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் பெனடிக்கின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர் அவரை பாதிரியாராக தொடர சொல்லியதாகவும் போலீசார் பதிவு செய்துள்ளார்.

அவ்வாறு எடுத்த அந்தரங்க வீடியோ காட்சிகளை தனது லேப்டாப்பில் சேகரித்து வைத்துள்ளார்.பாதிரியார் பெனாடிக் பதிவு செய்து வைத்த காட்சிகளே தற்போது அவருக்கு எதிரான சாட்சிகளாக மாறிவிட்டன. பாதிரியார் பெனடிக் தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்பி எடுத்து, போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்துள்ளார். இளம் பெண்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுது போக்காக இருந்தது.

Read More : அண்ணா சாலையில் கிடந்த ரூ.49 லட்சம்… போலீசாரிடம் ஒப்படைத்த மூவருக்கு குவியும் பாராட்டு..!

சாட்டிங் செய்யும்போதே பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம் பாதிரியார்.யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனாடிக் போலீசார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியுள்ளார்.

4 நாட்களில் மூன்று புதிய செல்போன்கள் வாங்கியவர், 11 சிம்கார்டுகள் மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிரியார் பெனாடிக் பயன்படுத்திய செல்போன்கள், லேப்-டாப், சிம் கார்டுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதிரியார் பெனடிக் ஆன்றோவின் செயலால், உண்மையான அருட்பணி செய்யும் பல பாதிரியார்களுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link