தஞ்சாவூர் மாவட்டத்தைசேர்ந்தவர் ஆரோன் செபஸ்டின் ராஜ் பிஹெச்டி டாக்டரேட் முடித்து தனியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.2021-உடல்நல சரியில்லாமல் 3 மாதம் கல்லூரி செல்லாத நிலையில் அப்போதுதான் தெரிந்துள்ளது.

நமது வருமானம் இல்லாமலும் குடும்பத்தை நடத்தலாம் என்று அதன் பிறகு நம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று நமக்கு பிடித்த மாதிரி வொர்க் ஸ்ட்ரெஸ் இல்லாமல் குடும்பத்தினருடன் குழந்தைகளிடம் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இவருடைய அண்ணன் ஏற்கனவே கும்பகோணத்தில் ஜூஸ் கடை நடத்தி வரும் நிலையில் அவரிடம் சென்று அதைப் பற்றி தெரிந்து கொண்டு இவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் ஆட்டோவில் ஜூஸ் கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பேசினோம்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

உங்களுடன் பணி புரிந்த ஆசிரியர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

ஆரம்பத்தில் என்ன பணிபுரிந்த ஆசிரியர்களிடம் இதை பற்றி பெரிய அளவில் நான் சொல்லிக்கொள்ளவில்லை.ஒரு சிலருக்கு தெரியும் அவர்கள் எதற்கு இவ்வளவு படித்துவிட்டு நல்ல வேலையை விட்டுவிட்டு ஏன் ஜூஸ் கடை நடத்துறீங்க அப்படி எல்லாம் கேட்டு இருக்காங்க எனக்கு இது புடிச்சிருக்கு எனக்கு இந்த லைஃப் புடிச்சிருக்கு அப்படின்னு ஒரே பதில் சொல்லுவேன்.

ஒரு சில ஆசிரியர்ஆரம்பத்தில் என் கடையை கிராஸ் செய்யும்போது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்த தொழிலில் நான் வாங்கிய ஊதியத்தை விட இரண்டு மடங்கு லாபம் பெறுகிறேன் குடும்பத்தாருடன் தினமும் டைம் ஸ்பென்ட் பண்ணுகிறேன். மேலும் ஆரம்பத்தில் ஆசிரியர் பணியை முழு நேரமாகவும் ஜூஸ் கடையை பகுதி நேரமாகவும் செய்து வந்தேன் ஆனால் தற்போது ஜூஸ் கடையை முழு நேரமாகவும் ஆசிரியர் பணியை எப்போதாவது பி.எட் மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்பு எடுத்து வருகிறேன்.

வருடம் முழுவதும் 1+1 ஆஃபர்:

ஜூஸ் கடை லைஃப் எனக்கு புடிச்சிருக்கு.தினமும் புது மனிதர்களை சந்திக்கிறேன்.அவர்களிடம் மனம் திறந்து பேசுகிறேன். என் குழந்தைகளை தினமும் பள்ளியில் விட்டு வருகிறேன்.கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது லைஃபை விட தற்போது நான் என்ஜாய் பண்ணுகிறேன் என்று கூறினார். மேலும்,இவருடைய ஜூஸ் கடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, கிர்ணி, என பத்து வகையான பழ ஜூஸ்களை30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்து வரும் இவர் வருடம் முழுவதும் 1+1 ஆஃபரை அளித்து வருகிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link