நீலகிரி மாவட்டம் உதகையில்மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி நாள்தோறும், திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 3வது நாள் திருவிழாவில் கேடய வாகனத்தில் ஸ்ரீபராசக்தி ரூபத்தில் அம்மன் அவதரித்து நகரின் பிரதான விதிகள் வழியாக மங்கள வாத்திய இசையுடன் உலா வந்தார்.

உதகையில் உள்ள பிரதான விதிகள் வழியாக வந்த அன்னையை வழி நெடுகிலும் பக்தர்கள் திராளா வந்து சாமி தரிசனம் செய்தனர். 3ம் நாள் விழாவில், காலை முதல் யாகங்கள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், நீலகிரி, ஊட்டிSource link