விழுப்புரம் அருகே பாப்பான்குளம் செஞ்சி ரோடு பகுதியில் பாட்ஷா பாய் பெட் ஷாப் அமைந்துள்ளது.

விழுப்புரம் அருகே பாப்பான்குளம் செஞ்சி ரோடு பகுதியில் பாஷா பாய் அக்வாரியம் ஃபிஷ் மற்றும் பெட் ஷாப் உள்ளது. இந்த கடைக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியில் இருந்து சிறுவர்கள் உட்பட பல வாடிக்கையாளர்கள் வந்து அவர்களுக்கு விருப்பமான பிராணிகளை வாங்கி செல்கின்றனர்.

இந்த கடை பத்து வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பறவைகள், மீன்கள், வாஸ்து மீன்கள், பென்சி புறாக்கள், முயல்கள் போன்ற அனைத்து செல்லப்பிராணிகளும் கிடைக்கின்றன.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

மீன் ரகத்தில் நூறு வகைகளிலும், முயலில் அனைத்து வகையான முயல்கள், அனைத்து வகையான பறவைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. காக்டெயில், லவ் பேர்ட்ஸ்,ஜாவா, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், ஸ்மால் கோனூர், ( காக்டெய்ல், லவ்பேர்ட்ஸ், ஆப்பிரிக்கா லவ்பேர்ட்ஸ், ஸ்மால் கோனூர், சங்கனூர், மாங்க் பரக்கீட், ஜாண்டியா கோனூர்) போன்ற பல வகை செல்லப்பிராணிகளும் இக்கடையில் உள்ளன.

பாஷா பாய் கடையில் வாங்கும் அனைத்து பிராணிகளும் இலவசமாக டோர் டெலிவரி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிராணிகளை எப்படி வளர்ப்பது? நோய் வந்தால் எப்படி தடுப்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் தங்களுக்கு தெரிந்த அளவிற்கு பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள், அறிவுரைகளையும் வழங்குகிறார்கள்

கடையில் விற்பனை செய்யப்படும் பறவைகள் 300 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், மீன் வகையிலும் ஐந்து ரூபாய் முதல் 5000 வரையிலும், முயல் வகையில் ஜோடி 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், மீன் டேங்க் 300 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரையிலும், மீன்களின் உணவு பத்து ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தக் கடைக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் வருகை புரிகிறார்கள்.

மேலும் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான கடையாக பாஷா பாய் கடை விளங்குகிறது. மேலும் பாஷா பாய் கடையின் இன்னொரு கிளை கே ரோடு அண்ணா நகர் பகுதியில் திறந்து அங்கும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் விழுப்புரம் மக்கள் தங்களுக்கு விருப்பமான பறவைகள் முயல்கள் புறாக்கள் வாங்குவதற்கு, பாஷா பாய் அக்வாரிய ஃபிஷ் மற்றும் பெட் ஷாப் -9894854599, 9790307071 என்ற எண்ணிற்கு தங்களுக்கு விருப்பமான பெட்களை வாங்கி மகிழுமாறு பாஷா பாய் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link