தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களுக்கு 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஒருங் கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன், தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஓட்டுனர்கள் மற்றும் மருத் துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத் துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 108 ஆம் தேதி மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஓட்டுநருக்கான பணியில்சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந் தபட்சம் ஓராண்டு நிறைவு பெற வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதி யமாக ரூ. 15 ஆயிரத்து 235 வழங்கப்ப டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறைநேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் தொடர்பான தேர்வு சாலை விதிகளுக்கான தேர்வு முறை தேர்வு செய்யப்படும்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

அனைத்திலும்தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங் கும் வசதி செய்து தரப்படும். இதேபோல மருத்துவ உதவியாள ருக்கான தகுதிகள் பி.எஸ்.சி. நர்சிங், பிளஸ் 2 படிப்புக்கு பிறகு ஜி.என். எம். ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகள் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது உயிர்அறி வியல், பி.எஸ்.சி. விலங்கியல், தாவரவி யல், உயிரியல், வேதியியல், நுண்ணுரி யியல், உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதம் ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 43 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதுக்கு மேல் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு ஆகிய முறை தேர்வு நடைபெறும்.

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப் பட்டவர்கள் 50 நாள்களுக்கு முழு நேர வகுப்பறைப் பயிற்சி, மருத் துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறைப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்க ளுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link