தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 80ம் ஆண்டு ராம நவமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடி மரத்துக்கு முன்பாக அமர்ந்திருக்கும் கருடாழ்வாருக்கு, வேதச்சாரியார்கள் பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருக்க கொடி மரத்தில் கொடியேற்றி வைத்து கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கொடி மரத்துக்கு வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து மீண்டும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்து சென்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link