இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் iQOO, ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ, ரெட்மி, சாம்சங், ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்கள் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது. தற்போது இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் அறிமுக சலுகையாக 5ஜி சேவையை அன்லிமிடெடாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

iQOO Z7 5ஜி: மீடியாடெக் 920 சிப்செட், 4500mAh பேட்டரி, 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன், பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ள இந்த போனின் விலை ரூ.18,999.

ரியல்மி 10 புரோ 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா இந்த போனின் பிரதான கேமராவாக உள்ளது. 5000mAH பேட்டரி கொண்ட இந்த போனின் விலை ரூ.18,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்ட் CE 2 லைட் 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சலை பிரதான கேமரா உள்ளது. 6.5 இன்ச் திரை அளவு, 5000mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது இந்த போனின் விலை ரூ.18,999.

போக்கோ X4 புரோ 5ஜி: ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், AMOLED டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட இந்த போனின் விலை ரூ.19,999.

ரெட்மி நோட் 12 5ஜி: ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 1 சிப்செட், 48 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனின் விலை ரூ.17,999.

சாம்சங் கேலக்சி எம்33 5ஜி: 6.7 இன்ச் திரை அளவு, எல்சிடி டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்ட இந்த போனின் விலை ரூ.17,999. ஒப்போ கே10 5ஜி: 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமான்சிட்டி 810 சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ஆர்ஐஎம் வேரியண்ட் கொண்ட இந்த போனின் விலை ரூ.16,999.

Source link