வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘என் விகடன்’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கடந்த சில வருடங்களாக என் வீட்டின் அருகில் வசிக்கும் வேறு மொழி பேசும் குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்றுத் தருவதை வழக்கமாகச் செய்து வருகிறேன். அவர்கள் என்னிடம் தமிழ்க் கற்றுக் கொள்ளும் நேரங்கள் நகைச்சுவையாக இருக்கும். பேசவே தெரியாத மொழியை எழுதி படித்து பின்னர் அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவது அவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மாநில பள்ளிகளில் மொழி கற்றல் கட்டாயம் என்பதால் அவர்களால் முடிந்தவரை கற்றுக்கொள்கிறார்கள்.
திருக்குறள், புறநானூறு, ஆத்திச்சூடி போன்றவற்றை மனனம் செய்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் உச்சரிப்பில் அனைத்தும் வித்தியாசமான சொற்களுடன் நகைச்சுவையாக இருக்கும்.
இக்குழந்தைகள் வேறுமொழியைக் கற்றுக் கொள்ளும் போது, நான் என் சிறுவயதில் கற்றுக் கொண்ட ஹிந்தியும் அந்த நாட்களும் தான் நினைவிழந்து போகும்.

நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் தோழி என்னிடம் வந்து , யாரோ ஒருத்தர் ஹிந்தி ஃப்ரீயா கத்துக் குடுக்கிறாராம். நான் அந்த கிளாஸுக்குப் போகப் போறேன்.’ நீயும் வர்றியா என்றாள். எனக்கு அது வரை ஹிந்தி அறிமுகமில்லை.’ எங்கு காணும் தமிழடா என்ற நிலை தான்.
இராமாயணமும், மகாபாரதமும் தொலைக்காட்சியில் ஹிந்தியில் தான் வந்து கொண்டிருந்தது. கதை தெரியும் என்பதால் டயலாக்ஸ் புரியாவிட்டாலும் பார்த்தேன். மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தூர்தர்ஷன் தொடர்’ ஜுனூன் கூட தமிழிலேயே டப் செய்து ஒளிப்பரப்பப்பட்டது. நான் செய்வேண்டா உன்ன கொல.. வெச்சிகாத வம்பு நீ என்கிட்ட என ஆர்டர் மாற்றி தமிழ் டப்பிங் கில் தான் அந்தத் தொடர் வெற்றி பெற்றது.
சரி , காலை நேரங்களில் பெரிதாக ஒன்றும் கிழிக்கப்போவதில்லை, ஹிந்தியாவது கற்கலாம் எனச் சென்றேன்.

ஒரு பெரிய வீட்டின் வராந்தாவில் ஒரு திண்ணைப் போன்ற அமைப்பில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருக்க, நிறைய மாணவர்கள் கீழே அமர்ந்து மும்முரமாக ஹிந்தியைப் படித்துக் கொண்டிருந்தனர். அதில் சிலர் பள்ளி மாணவர்கள் அல்லாமல், சற்றுப் பெரியவர்களாகவும் இருந்தனர்.
நானும்’ என் தோழியும்’ அவரிடம் சென்று குட் மார்னிங் சார். நாங்க ஹிந்தி கத்துக்க வந்துருக்கோம் என்றோம். அவர் வெரி குட், என்ன பாத்து குட் மார்னிங் சொல்ல வேண்டாம். ராம் ராம் ன்னு சொன்ன போதும் என்றார். ஒரு நோட்டை எடுத்து ஹிந்தி எழுத்துக்களை அழகாகச் சொல்லக் கொடுத்தார்.
அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்றபோது தான் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. அவர் மிகவும் நல்லவர்.. நன்றாக மொழியைக் கற்றுக் கொடுப்பவர்.. யாரிடமும் ஒரு பைசா கூட ஃபீஸ் என்ற பெயரில் வாங்காதவர்.. பல்லாவரத்தில் இருந்து நாள் தவறாமல் வந்து நேரம் தவறாமல் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவர்.. அவருக்கு அவர் வீட்டின் வராந்தாவில் அவருக்கு பாடம் எடுக்க அனுமதி தந்தவர்.

எக்ஸாம் ஃபீஸ் மட்டும் கட்டவேண்டும்.’ ஹால்டிக்கெட் வேலைகளை எல்லாம் அவரேப் பார்த்துக் கொள்வார்.. ஹிந்தியில் நன்றாக தேர்ச்சிப் பெற்றவர். இதை அறிந்த எனக்கும் என் தோழிக்கும் அவர்மீது மதிப்புக் கூடியது. ஆனால் எனக்கு ஹிந்தி பிழையில்லாமல் நன்கு எழுத முடிந்ததே தவிர, அந்த மொழி அவ்வளவு சுலபமாக என் மூளையில் ஏறவில்லை. காரணம் தெரியவில்லை. அவர் நானும் என் தோழியும் படித்ததைப் பார்த்து விட்டு, பெரிய பசங்களா இருக்கீங்க, பிராத்மிக் எக்ஸாம் எழுத வேண்டாம்.. டைர்க்டா மத்யமா எக்ஸாம் எழுதிடுங்க என்றார். நாட்களுக்கு முன் புத்தகத்தை எடுத்தேன்.
என் தோழிக்கு ஹிந்தியில் நாட்டம் இருந்ததால் நன்றாகப் புரிந்து படித்தாள்.’எனக்கு அவ்வளவு நாட்டம் ஏற்படவில்லை அந்த மொழியின் மீது.’ தெரிந்ததை எழுதலாம் என்று தேர்விற்குச் சென்றேன்.’நிறைய’ வினாவிற்கு விடை தெரிந்தது. .’ முட்டாள்’ என்ற வார்த்தைக்கு பேவகுஃப் என எழுதவேண்டும் என்பது நினைவில் வரவேயில்லை.

அடுத்தடுத்த தேர்வுகள் கொஞ்சம் கடினமாகத் தோன்றவே, ஹிந்திக்கு முழுக்குப் போட்டுவிட்டேன்.
பிந்நாளில் அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். ஒரு நல்ல மனிதர், ராம் ராம் மாஸ்டர் என அனைவரும் அழைக்கப்பட்டவர், தானாக முன்வந்து இலவசமாக ஒரு மொழியைக் கற்றுத்தந்த போதுகூட, சோம்பேறித்தனத்தால் கற்காமல் இருந்துவிட்டோமே என.
ஆனால் என்னவோ தெரியவில்லை. இன்றளவும் எனக்கு ஹிந்தி அவ்வளவாக பிடிபடுவதில்லை.
ஷாருக்கான், சல்மான்கான், அமிதாப்பச்சன் என சிலரின் சினிமாக்களைப் பார்த்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டாலும், வடஇந்தியாவிற்குச் சென்றால், எங்கேயாவது குடும்பத்தைத் தவறவிட்டு தனிமையில் மாட்டிக்கொண்டால், உயிர்பிழைக்க வேண்டுமே என்று, பீனே கே பானி என்ற வார்த்தைகளை மட்டும் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.
சில நல்ல ஹிந்திப் பாடல்களைக் கேட்கும்போது, கூடவே சேர்ந்து பாட வேண்டும் என நினைப்பேன்.. ஆனால் ..பியார், இஷ்கு, மொஹோபத், மேரிஜான் போன்ற வார்த்தைகளைத் தவிர மற்றவை மனதில் நிற்காது..
பிரதமரின் நிகழ்ச்சிகளைப் பார்த்ததில் ..மேரே பியாரே தேஷ்வாசியோன்.. புரிந்தது.. மற்றபடி அவரின் தனா.. ஜனா ..’என்று’ முடியும் திட்டங்கள் எதுவும் புரிவதில்லை.
ஒருமுறை, ஹிமாச்சல் பிரதேஷ் சென்றிருந்தபோது, நீண்ட தூர மலைப் பயணம். பேருந்து ஓரிடத்தில் நின்றபோது, பஸ் டிரைவரிடம், ஹில் ஜர்னி ஓவர்?? எனக் கேட்டேன்.

அதற்கு அவர்,, கித்னா ஐயா..உத்துனா ஜானா.. என்றார்.’ எனக்கு அப்போதே மயக்கமும், வண்டியும்’ வருவது போல் ஆனது.. அருகில் இருந்த ஹோட்டலுக்குள் சென்று பிளாஸ்டிக் கவர் சாஹியே என்றேன்.’ அங்கிருந்த டர்பன்வாலா, பிளாஸ்டிக் நஹி நஹி. என்றார்.. நானோ வாமிட கர்னே கேளி யே என உளறினேன்.
அவர் மீண்டும் மீண்டும் நஹி’நஹி என்றார்.’ நான் வாமிட் செய்வது போல் ஆக்ஷன் செய்து.. இதற்காகத் தான் கவர்’.. என்றேன். அவர் ஓஓஓ.’உல்டி பிராப்ளம்…’அச்சா அச்சா என இரண்டு கவர்களை என்’கையில் கொடுத்து .. கேர்ஃபுல் ஜி. என்றார். தன்யவாத் ஜீஈஈஈஈஈஈ.’ என்று கூறியபடி பஸ் ஏறினேன். என்’வர்களாலேயும் பாஷை தெரியாத’ ஊரில் பயணம் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கை அன்று தோன்றியதோ என்னவோ.. போன்ற வழக்கம் வரும் உல்டி..சாரி சாரி.. வாந்தி அன்று வரவேயில்லை.
மற்றபடி..நான் *ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா ஹே*… டைப் தான்..
-திருமதி. ஜே.வினு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கவும் – my@vikatan.com எந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #மைவிகடன். இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.