மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூலில் சாதனை புரிந்த இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர், தமிழில் விஜய் நடிப்பில் ‘நண்பன்’ என ரீமேக் செய்திருந்தார். கல்லூரி நண்பர்கள் மற்றும் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய சுவாரஸ்யமான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தியாவில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

இது குறித்து அமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் ரகசியமாக திட்டம் தீட்டி வருவதாகவும், அதில் தன்னை சேர்க்கவில்லை என்றும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர், “நான் விடுமுறையில் இருந்தபோது இந்த மூவரும் ஏதோவொரு விஷயமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததாக நான் அறிந்திருக்கிறேன். இவர்கள் மூவரும் நம்மிடமிருந்து எதையோ மறைக்கிறார்கள். இல்லாமல் நடக்காது.இது குறித்து விசாரிக்க வேண்டும்” என்று கூறி அதில் ‘வைரஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் போமன் இரானியையும் டேக் செய்திருந்தார். அவரும் அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஒரு வீடியோவைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில், கரீனா கபூர் குறிப்பிடும் வீடியோவில் அமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் சிவப்பு கலர் டீசர்ட் அணிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் பின்னால் ‘idiots’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

கரீனா கபூர் காமெடிக்காகவே இதைப் பதிவு செய்திருந்தாலும் ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதைத்தான் சூசகமாக விளம்பரப்படுத்துகின்றனர் எனப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.Source link