ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும், அவருடைய பதவியை பறித்ததும்தான்இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடத்தப்பட்ட பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி எந்த குடும்பப் பெயர் இருப்பது எப்படி?” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது, மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடுவதை போல இருப்பதாகவும், மோடி என்ற சமூகத்தினரை அவமதிப்பதாகவும் சொல்லி குஜராத்தின் முன்னாள் பாஜக அமைச்சரும் எம்.எல்.ஏவுமான பர்னேஷ் மோடி என்பவர் அவதூறு தொடர்ந்தார். அது சூரத் நகரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஹெச்.ஹெச்.வர்மா தலைமையில் விசாரணைக்கு வந்தபோது அவர் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

இதன் காரணமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாகவும் அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க:

‘2 ஆண்டு சிறை; 1 மாதம் ஜாமீன்…’ நீதிமன்ற தீர்ப்பு, ராகுல் காந்தியின் எதிர்வினை!

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், “ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு முன்பே அவரது எம்.பி. பதவியை பறித்ததாக அறிவித்திருப்பது ஜனநாயகத்தின் மீது அடிக்கப்பட்ட சாவு மணி” என்றும், “பாஜகவின் இந்த பழிவாங்கும் அரசியல் எதேச்சதிகாரமாக உருமாறி ஆபத்தான வேகத்தில் செல்கிறது.” என்றும் குறிப்பிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இதனை ட்விட்டரில் இன்று ரீட்வீட் செய்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “வரலாறு பேசும் திரு.மு.க.ஸ்டாலின். கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பிக்கள் தங்களது பதவியை மீட்டு 3 மாத அவகாசம் கொடுத்த சட்டத் திருத்தத்தை கிழித்து எறிந்தவர் ராகுல் காந்தி. அது முழுக்க முழுக்க முட்டாள்தனம்.

op-ed - கேம்ஸ் ஆரம்பம்: ராகுல் காந்தியின் சிறை தண்டனை குறித்த தலையங்கம் - டெலிகிராப் இந்தியா

ஓ.பி.சி. சில சமுதாய மக்களை அவமதித்ததற்காகவும், அதற்கு மன்னிப்பு கேட்காததற்காகவும் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்பதையே வழக்கமாக கொண்டிருந்தவர் ராகுல் காந்தி. பொது இடங்களில் பொய் பரப்பிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பார். ஆகாயாலேயே இந்த தீர்ப்பு பொய் பேசுவதை பழக்கமாக கொண்டிருப்பவர்களை உலுக்கியிருக்கிறது.

ரஃபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றஞ்சாட்டியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு 3 பக்கத்திற்கு எழுதி கொடுத்தவர் இந்த ராகுல் காந்தி. உங்களது அரசையே கவிழ்த்தவர்களோடுதான் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது வரலாறு உங்களுக்கு நினைவூட்டியிருக்க வேண்டும். ஜனநாயகத்தை ஆதரிக்கும் மக்களாக மாறுவேடத்தில் இருக்கும் உங்களைப் போன்ற எதேச்சதிகாரிகள் என்ன காத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம். என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link