தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் சாரல் மழை பெய்தாலும் பல நேரங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவியில் தண்ணீர் பாறைகளை ஓட்டி மிக குறைவான அளவில் வந்து கொண்டிருக்கிறது.

குற்றாலத்தில் மெயின் அருவியை தவிர மற்ற எந்த அருவிகளிலும் தண்ணீர் வரவில்லை என்பதால் வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியிலேயே குளித்து செல்கின்றனர். மெயின் அருவியில் விழும் தண்ணீரால் பாறைகளில் செதுக்கப்பட்டு இருக்கும் சிவலிங்கத்தை உங்களால் எளிதில் பார்க்க முடியும். பெண்கள் பகுதியை காட்டிலும் ஆண்கள் பகுதியிலேயே சற்று தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருந்தது.

குற்றால அருவி

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதால் பாறைகளின் இடுக்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் மீன்களை அதிகளவில் பார்க்க முடிகிறது. அந்த மீன்களை சாப்பிடுவதற்கு வந்திருக்கும் கொக்குகளையும் பார்க்க முடியும். அடிக்கிற வெயிலுக்கு நீர் கோழிகள் தேங்கி இருக்கும் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி விட்டுச் சென்ற பிளாஸ்டிக் அவர்கள் பாட்டில்கள் பாறைகள் இடுக்கில் சிக்கி உள்ளது. வனத்துறையினரால் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது பின்பும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவில்லை.

இதையும் படிங்க : திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

குற்றாலத்திற்கு வருபவர்கள் அருவியில் குளித்துவிட்டு, அங்கு கிடைக்கும் பிரஷ்ஷான பழங்களை சாப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கும். ஸ்டார் வடிவில் இருக்குற ஸ்டார் ஃப்ரூட், டிராகன் ஃபுரூட், பன்னீர் ஆப்பிள், துரியன், முள் சீதா, போன்ற வித்தியாசமான பல வகையான பழங்களை ருசிக்க மறக்காதீங்க. ஒரு டிராகன் புரூட் 100 ரூபாய் விற்கின்றனர். நீங்க குற்றாலத்துக்கு போகும்போது இந்த பழங்கள் எல்லாம் ருசித்து பார்க்காம திரும்பாதீங்க.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link