மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பு 2022-23 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இல்லாதவர்கள் உடனடியாக செலுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

இதுவரை 1390 கோடி ரூபாய் சொத்து வரியாகவும், 412 கோடி ரூபாய் தொழில் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி கால அவகாசம் முடிவதற்குள் நிலுவையை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும், நீண்ட காலமாக செலுத்தாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: சென்னை, சென்னை மாநகராட்சி, சொத்து வரி



Source link