`பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டிலுள்ள அனைவருக்காகவும் பணியாற்றுவேன்’ என்று பதவியேற்ற தாங்கள், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் தங்களுக்குத் தனிப்பாசம் உண்டு. கோவிட் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது என்று ஒரு வழக்கின்போது பாராட்டியிருந்தீர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மதுரை நீதித்துறை விழா

மதுரை நீதித்துறை விழா

`தொழில்நுட்பம், பதிவகம் மற்றும் நீதித்துறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்’ என்று பொறுப்பேற்றபோது சொன்னதுபோல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீபத்தில் வெளியாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைய அடித்தளமிட்டவர் தலைவர் கருணாநிதி. 1973-ம் ஆண்டு முதல் முயன்று, 2000-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டில், தென்மாவட்ட மக்களின் கனவை நனவாக்கினார்.

நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காகத் தொலைநோக்குச் சிந்தனையுடன் தி.மு.க அரசு செயல்படும் என்பதை நினைவூட்டத்தான் இதைக் குறிப்பிட்டேன்.

நீதி நிர்வாகம், சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு விரைந்து வழங்குதலை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான வசதி, மனித, பிற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்திருக்கும் தமிழ்நாடு அரசு, அதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுபவர்.Source link