பொள்ளாச்சி: ஆழியாறு அணையில் முதலை நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை உள்ளது. தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால், அணையின் உள்ளே உள்ள பாறைகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெளியே தெரிகின்றன. நீர்மட்டம் குறைந்துவிட்டதால் சித்தாறு, கவியருவி ஆகியவை சேரும் அணைப் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது.Source link