தேனி மாவட்ட விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் பயன்படும் இந்த முக்கிய திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதில், ஒரு கோடி ரூபாய் வரை 35 சதவீதம் மானியத்துடன் கடன் பெறலாம்.

பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமான PMFME மூலம் உணவு பதப்படுத்தும் ஏதேனும் ஒரு தொழிலை மேற்கொள்வதற்கு அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். கடனிலிருந்து 35 சதவீதம் மானியமாகவும் இத்திட்டத்தில் பெற முடியும் .

PMFME :

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

தேனி மாவட்டம் விவசாயம் சேர்ந்த மாவட்டமாக உள்ளது தேனி மாவட்டத்தில் வச்சிக்க கூடிய பொதுமக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இங்கு விவசாயம் செய்து வரும் மக்கள் அவ்வப்போது சந்திக்கும் சாகுபடி பிரச்சனை செய்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காததுதான். இதற்கு ஒரே நேரத்தில் கூடுதல் உற்பத்தி காரணமாக அமைகிறது.

இந்நிலையில், விளைவித்த விளை பொருளுக்கு விலை இல்லாமல் இருக்கும் சூழலில் விளைபொருளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பாளரின் மூலம் இந்த இழப்பீட்டை சரி செய்ய முடியும் என்று தொழில் வல்லுநர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு தக்காளியில் இருந்து சாஸ் தயாரிப்பது, மாங்காய் பொடி தயாரித்தல், தேங்காய் எண்ணெய் தயாரித்தல், காய்ந்த தேங்காய்ப்பால் பவுடர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க முடியும்.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

இதற்கு தகுந்த தொழில் நுட்ப அறிவும் தொழில் தொடங்குவதற்கான நுணுக்கமும் தெரிந்தால் இழப்பில் இருந்து தற்காத்துக் கொண்டு அதிக லாபம் பெறும் முயற்சியாக மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் அமையும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முழு விவரம் :

தொழில் தொடங்குவதற்கு உரிய திட்டம் இருந்தால் அரசின் 35 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது. மத்திய அரசின் (PMEGP) பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் மூலம் மனித கடன் பெற்று புதிதாக தொழில் தொடங்கலாம். மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள திட்டமான PMEGP பற்றி முழுமையாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய சூழலில் படித்து முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு உள்ளதா என்பது கேள்விக்குறி தான். தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதை தவிர்த்து சொந்தமாக தொழில் தொடங்கும் போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதே சாதுர்யம்.

இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

தொழில் தொடங்குவதற்கு முறையான திட்டமிருந்தால் மட்டும் போதுமானது. நீங்கள் செய்யும் தொழில் உணவு பதப்படுத்தும் வகைகளின் கீழ் வந்தால் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் உங்களுக்கு உதவும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஏற்கனவே சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருக்கும் தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும், அல்லது புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பயன்:

மத்திய அரசின் நிதியுதவியுடன் 2020ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2021 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி திட்டச் செலவில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம், மத்திய அரசு, மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளை பகிர்ந்து கொள்ளும். 2 லட்சம் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் இணைக்கப்பட்ட மானியம் வழங்கப்பட வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

மேலும் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கும் வசதியை அதிகரிக்க செய்தாலும்,இலக்கு நிறுவனங்களின் வருவாய் பெறுதலும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின் விதிகளை மேம்படுத்துதலும் அமைப்புசாரா துறையில் இருந்து முறைசார்ந்த தொழில் துறையாக மாற்றுதலும் இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

விண்ணப்பிக்க தகுதிகள்:

திட்டத்தில் விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணபிக்க கல்வி தகுதி தேவையில்லை. இந்தத் திட்டத்தில் தனி நபராகவும் அல்லது நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் செய்யக்கூடிய தொழில், உணவு மதிப்பு கூட்டுதலாக இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நெல்லில் இருந்து அரிசி, அரிசி மாவு தயாரிப்பது , தென்னையில் இருந்து தேங்காய் எண்ணெய், தேங்காய் சர்க்கரை, தேங்காய் மிட்டாய் தயாரித்தல், கடலில் இருந்து கடலை மிட்டாய், கடலை எண்ணெய், கடலை பட்டர் தயாரிப்பது போன்ற ஒரு உணவுப் பொருளில் இருந்து இன்னொரு உணவுப் பொருள் தயார் செய்ய வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.

தனிநபருக்கு திட்டமதிப்பில் 35% மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். அதிக பட்சமாக ரூ 10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும் சுய உதவிக் குழுக்களுக்கு

உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவிக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்க நிலை முதலீடாக வழங்கப்படும்.

தனிநபர் தொழில் தொடங்கலாம்:

தனிநபர் புதிதாக தொழில் தொடங்கலாம் அல்லது முன் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கடன் உட்சவரம்பு ரூ.1 கோடி வரை, ரூ.10 லட்சம் கடன் வரை பிணையம் தேவையில்லை.

பயனாளிகள் குறைந்தபட்சம் 10 சதவீதம் பங்களிப்பு செய்யவேண்டும். மீதம் 90 சதவீதம் வங்கி கடனாக வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பம் :

உதாரணத்திற்கு தொழில் தொடங்க ஒரு லட்ச ரூபாய் திட்ட மதிப்பீடு என்றால் அதில் தொழில் தொடங்குபவர் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மீதம் ரூ.90 ஆயிரம் கடனாக பெற்று தொழிலை தொடங்கலாம். திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வசதியும் உள்ளது . ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு https://pmfme.mofpi.gov.in ஏண்டா இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொழில் தொடங்குவதற்கான திட்ட ஆவணம் தயார் செய்ய வேண்டும் . பின் இயந்திர விலைப்பட்டியல், ஆதார், பான் கார்டு, ரேஷன் கார்டு வங்கி கணக்கு எண், தொழில் தொடங்குபவரின் முழு விவரம், தொடங்கும் இடம், எந்த வங்கியில் கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link