நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. குஜராத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ இடையேயான போட்டி நடைபெறுகிறது.

அதற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டு, அதன் விலை பட்டியலையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், கவுண்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் கேலரி C/D/E லோயர் பிரிவு டிக்கெட்டுகள் 1,500 ரூபாயாகவும், ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் கேலரி D/E மேல் பிரிவு டிக்கெட்டுகள் 3000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு இருக்கும்’ – பயிற்சியாளராகும் விருப்பத்தை தெரிவித்த ஆசி. வீரர்

அதேபோல கேலரி I/J/K கீழ் பிரிவு டிக்கெட்டுகள் 2500 எனவும், கேலரி I/J/K மேல் பிரிவு டிக்கெட்டுகள் இரண்டாயிரம் ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன், டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link