வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தலையணி

பெங்களூரு:கர்நாடகா சட்டசபை தேர்தலில், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க, தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தமிழ் செய்திகள்

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, வரும் மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ., – காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு இந்தத் தேர்தலில் ஆதரவு அளிக்க, தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா எல்லையை ஒட்டியுள்ள, தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் உள்ள கர்நாடகா பகுதிகளில் தனித்து போட்டியிட பாரத் ராஷ்ட்ர சமிதி திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், தேவ கவுடா கட்சிக்கு, சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, சமீபத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

அப்போது, ​​மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மம்தா பானர்ஜி உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

விளம்பரம்Source link