கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளியன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதையொட்டி சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கேப்டன் மகேந்திர சிங் தோனி, மொயின் அலி, ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து, சென்னை அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் மேத்யூ ஹேடன் வெளியிட்டார்-

வழக்கம் போல இந்த முறையும் சென்னை அணி பலமாக இருக்கிறது. அனைத்து தரப்பிலும் சிறந்த ஆட்டக்காரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது கேப்டன் தோனிக்கு நன்றாக தெரியும். இந்த முறையும் அனைத்து வீரர்களையும் சிறப்பாகப் பயன்படுத்தி அவர் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியைப் பெற முயற்சிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. என்னை பொறுத்த அளவில் நடப்பு சீசனில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியின் முக்கிய வீரராக இருப்பார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்சின் திறமை முழுவதுமாக வெளிவரவில்லை. அந்த குறை இந்த சீசனில் நீங்கிவிடும். அவரால் 4 ஓவர்கள் மிகச் சிறப்பாக வீச முடியும். அதே நேரத்தில் எந்த நேரத்திலும் களத்தில் இறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடிய திறமை ஸ்டோக்சிற்கு இருக்கிறது. எனவே பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறேன். இதேபோன்று ஜடேஜாவும் மிக தரமான ஆல்ரவுண்டராக இருக்கிறார். அவரின் பங்களிப்பும் இந்த முறை சென்னை அணிக்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் பென்ஸ் ஸ்டோக்சை சென்னை அணி ரூ.16.50 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link