இரு குடும்பத்திற்கும் ஏற்கனவே அறிமுகம் என்றும், பரினீதியும், ராகவும் வெளிநாட்டில் சேர்ந்து படித்ததிலிருந்து அவர்களுக்குள் அறிமுகம் உண்டு என்றும் கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து நட்பிலிருந்து வந்தனர். ஆனால் இப்போதுதான் அந்த நட்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இருவருக்கும் இடையே அனைத்திலும் ஒத்துப்போவதாகவும், ஒருவருக்கொருவர் ஆதரவாக நடந்து கொள்வதாகவும் பரினீதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரினீதி சோப்ரா, ராகவ்

பரினீதி சோப்ரா, ராகவ்

இருவரும் சேர்ந்திருப்பதில் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சி என்றும், விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் தங்களது வேலையில் பிஸியாக இருப்பதால், நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே நிகழ்ச்சி எளிய முறையில் இருக்கும் என்றும் இருவரது குடும்பத்தினரும் இருப்பார்கள்.Source link