விருதுநகர் மாவட்டத்தில் இயக்கிவில்லிபுத்தூர் அருகே திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்று அழிந்து, இடிந்துபோன சுவடுகளோடு கலவையாக காட்சியளிக்கிறது.

படைவீரர்களின் கோட்டை :

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே உள்ள கிராமம் வடுகபட்டி. இந்த கிராமத்தின் எல்லையில் மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் பிரம்மாண்டமான அரண்மனை இடிந்துபோய் கூடக் காணமுடியும். நேர்த்தியான முறையில் கட்டப்பட்ட இந்த அரண்மனை போதிய பராமரிப்பு இன்றி இடிந்து போய் காணப்படுவதால் இன்று அங்கு மக்கள் போக்குவரத்து இல்லை. ஆனால் ஒரு காலத்தில் படைவீரர்கள் தங்கியிருந்த கோட்டையாக இருந்ததாக கூறப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

எப்படி கட்டப்பட்டது?

மொத்தமாக 4 அறைகளை கொண்ட இந்த அரண்மனை செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் மேற்பகுதிகள் பெயர்ந்து விழுந்த நிலையில் எஞ்சிய பகுதிகள் அதில் இருக்கும் தூண்கள் தான் தாங்கி பிடித்தபடி உள்ளன. அரண்மனையின் அமைப்பை வைத்தே இது நாயக்கர் கால அரண்மனை என்பதை உறுதி செய்யலாம்.

அழிந்து வரும் திருமலை நாயக்கர் கால அரண்மனை

அரண்மனையின் வரலாறு :

இந்த அரண்மனை திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. திருமலை நாயக்கர் அதாவது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் காலையில் ஆண்டாள் கோவில் பூஜை முடிந்த பிறகு தான் காலை உணவை உட்கொள்வார் என கூறப்படுகிறது. மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பூஜையை அறிந்து கொள்ள மதுரையில் இருந்து திருவில்லிபுத்தூர் வரை வழிநெடுக இது போன்ற பல அரண்மனைகள் கட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு.. நெல்லையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..

அதில் பெரிய பெரிய மணிகளை வைத்திருந்ததாகவும், ஆண்டாள் கோவில் பூஜை முடிந்த பின் அருகில் உள்ள மண்டபத்தில் மணியடிக்க அந்த ஓசை கேட்டு செல்லும் வழியில் உள்ள கோட்டைகளில் மணியடிக்க மணியோசை இந்த வழியில் உள்ள கோட்டைகள் வழியாக மதுரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்படி கட்டப்பட்ட பல அரண்மனைகள் பல இடிந்து விட்ட நிலையில், இந்த அரண்மனை மட்டும் வரலாற்றை தமக்கு நினைவுபடுத்த காத்திருக்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுவர்கள் மட்டும் எஞ்சியுள்ள இந்த அரண்மனையை இனி தொல்லியல் துறை கையில் எடுத்து மீட்பது இயலாத காரியமாகும். வரலாற்று சுவடுகளை இனிமேலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link